என் மலர்

  செய்திகள்

  நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று தேர்வு
  X

  நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
  புதுடெல்லி :

  இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும், இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

  நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான புதிய தேர்வு குழுவினர் செய்யும் முதல் அணி தேர்வு இதுவாகும். கேப்டனாக டோனி தொடருவார்.

  உடல் தகுதியை நிரூபிக்கும் படி யுவராஜ்சிங் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் காயம் அடைந்து இருப்பதால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
  Next Story
  ×