search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த ஜாவியர் லாரா பந்தை உதைக்கிறார்.
    X
    கோல் அடித்த ஜாவியர் லாரா பந்தை உதைக்கிறார்.

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா அணிக்கு 2-வது தோல்வி

    கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் கேரளா தோல்வி அடைந்தது.
    கொச்சி :

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடரில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின. கேரளா அணி முதல் ஆட்டத்தில் கவுகாத்தியிடம் தோல்வி கண்டு இருந்ததால் அந்த அணியில் 6 வீரர்கள் மாற்றப்பட்டனர்.

    கொல்கத்தா அணி வீரர் ஹெல்டெர் போஸ்டிகா 17-வது நிமிடத்தில் காயம் அடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜூயன் பெலென்கோசா களம் இறங்கினார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 54-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோல் போட்டது, மாற்று ஆட்டக்காரர் பெலென்கோசா கடத்தி கொடுத்த பந்தை ஜாவியர் லாரா (ஸ்பெயின்) கோலாக்கினார்.

    உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய கேரளா அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சி கடைசி வரை கைகூடவில்லை. முடிவில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் சென்னையுடன் டிரா (2-2) கண்டு இருந்தது. கேரளா அணி தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.
    Next Story
    ×