என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது வெற்றி
Byமாலை மலர்3 Oct 2016 3:57 AM GMT (Updated: 3 Oct 2016 3:57 AM GMT)
ஐதராபாத்தில் நடந்து வரும் தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்கு 2-வது வெற்றி பெற்றுள்ளது.
43-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆண்களில் ‘எப்’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது லீக்கில் தமிழக அணி 70-42 என்ற புள்ளி கணக்கில் பீகாரை தோற்கடித்தது. தமிழக அணியில் அதிகபட்சமாக ஆர்.ஹரிஸ் 24 புள்ளிகளும், எஸ்.ஹரிஸ் 16 புள்ளிகளும் எடுத்தனர்.
பெண்கள் பிரிவில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி முதல் ஆட்டத்தில் மராட்டியத்தை வென்று இருந்தது. நேற்று 2-வது ஆட்டத்தில் தமிழக அணி 62-16 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை பந்தாடியது. தமிழக அணியில் சிறப்பாக செயல்பட்ட சத்யா 20 புள்ளிகளும், தேவி கலா 10 புள்ளிகளும் சேர்த்தனர்.

Next Story
×