என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையங்கோட்டையில் மாநில கைப்பந்து போட்டி: சென்னை அணிகள் சாம்பியன்
Byமாலை மலர்3 Oct 2016 2:58 AM GMT (Updated: 3 Oct 2016 2:58 AM GMT)
பாளையங்கோட்டையில் மாநில கைப்பந்து போட்டியில் சென்னை அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பில் 66-வது மாநில சீனியர் ஆண்-பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 73 அணிகளும், பெண்கள் பிரிவில் 36 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகள் லீக், நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டது. நேற்று இரவு இறுதிப்போட்டிகள் நடந்தன.
இரவு 7 மணிக்கு நடந்த பெண்களுக்கான இறுதிபோட்டி சென்னை ஜேப்பியார் கல்லூரி அணியும், சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணியும் விளையாடின. இதில் 25-15, 25-20, 31-29 என்ற புள்ளி கணக்கில் சென்னை ஜேப்பியார் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தமிழ்நாடு கைப்பந்து கழக செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சித்திரை பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி பொது மேலாளர் குணசேகரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற சென்னை ஜேப்பியார் கல்லூரி அணிக்கு கோப்பையை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆண்கள் பிரிவில் இறுதி போட்டி நடந்தது. இதில் சென்னை ஐ.ஓ.பி. அணியும், பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஐ.ஓ.பி. அணி 25-21, 25-22, 25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Next Story
×