என் மலர்

  செய்திகள்

  நம்பர் ஒன் கனவு நனவானது: ஏஞ்சலிக் கெர்பர்
  X

  நம்பர் ஒன் கனவு நனவானது: ஏஞ்சலிக் கெர்பர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வர வேண்டும் என்ற தனது கனவு நனவானதாக ஏஞ்சலிக் கெர்பர் கருத்து தெரிவித்துள்ளார்.
  நியூயார்க் நகரில் நடந்து வரும் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 11–ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மோதினார். இந்த போட்டியில் பிளிஸ்கோவா, போராடி செரீனாவை அடக்கினார்.

  மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 2–ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கியை (டென்மார்க்) எதிர்கொண்டார். இதில் அதிரடியான ஷாட்டுகள் மூலம் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஏஞ்சலிக் கெர்பர் 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வோஸ்னியாக்கியை வெளியேற்றி, இறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

  இந்த ஆண்டில் கெர்பர், கிராண்ட்ஸ்லாமில் இறுதி சுற்றுக்கு வருவது இது 3–வது முறையாகும். ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனிலும் இறுதி சுற்றை எட்டியிருந்தார்.

  செரீனா அரைஇறுதியில் மண்ணை கவ்விய அதே வேளையில், கெர்பர் அரைஇறுதியில் வெற்றி கண்டதால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் புதிய ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். நாளை மறுதினம் வெளியாகும் தரவரிசையில் கெர்பர் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுகிறார்.

  வெற்றி குறித்து ஏஞ்சலிக் கெர்பர் கூறியது:-

  ‘உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வர வேண்டும் என்பது எப்போதும் எனது கனவாக இருந்தது. அந்த கனவு இப்போது நனவாகி இருக்கிறது. ஒரே நாளில் இறுதிப்போட்டி மற்றும் நம்பர் ஒன் இடம்....உண்மையிலேயே இது எனக்கு சிறப்புக்குரிய நாளாகும்.

  ஸ்டெபி கிராப் சிறந்த வீராங்கனை. பழகுவதற்கு இனிமையானவர். அவருக்கு பிறகு ஜெர்மனியில் இருந்து ‘நம்பர் ஒன்’ இடத்தை பெற்றிருப்பதை நினைத்தாலே பரவசமடைகிறேன். அவரும் என்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்.
  Next Story
  ×