என் மலர்

  செய்திகள்

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை நாளை மோதல்
  X

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை நாளை மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை அணிகள் நாளை மோகின்றன.
  நத்தம்:

  தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஒவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நத்தம், நெல்லை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி காரைக்குடி காளையை 67 ரன் வித்தியாசத்திலும், காஞ்சி வாரியர்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும், திண்டுக்கல் டிராகன்சை 6 ரன்னிலும் வென்றது. தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் 45 ரன்னிலும், கோவை கிங்சிடம் 11 ரன்னிலும் தோற்றது.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெய்ன்ஸ் அணியை நாளை (10-ந்தேதி)எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

  ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மதுரையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. கோபிநாத், தலைவன் சற்குணம், வசந்த் சரவணன், சசிதேவ், கவ்ஜித் சுபாஷ், சாய் கிஷோர், தமிழ் குமரன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
  Next Story
  ×