என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
  X

  திண்டுக்கல் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய லீக் போட்டியில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
  நத்தம்:

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். மொத்தம் 29 லீக் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இதுவரை 17 ஆட்டங்கள் முடிந்து விட்டன.

  ஆனால் எந்த அணியும் அரைஇறுதியை இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல் நத்தத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வரும் 18-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் விளையாடி வருகின்றன.

  இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கோபிநாத், தலைவன் சற்குணம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டி விளையாடினர். சிக்ஸர்களும், பவுண்டரிகளாக விளாசினர்.

  இதனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 31 பந்துகளில் 50 ரன்களையும், 10.2 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது. மேலும் முதல் விக்கெட்டுக்கு  கோபிநாத்-சற்குணம் ஜோடி 144 ரன்கள் குவித்தது. கோபிநாத் 76(53), தலைவன் சற்குணம் 72(50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

  ஒரு கட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

  திண்டுக்கல் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து, 173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது.
  Next Story
  ×