என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
85 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
Byமாலை மலர்6 Sep 2016 5:31 PM GMT (Updated: 6 Sep 2016 5:32 PM GMT)
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு:
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
மேக்ஸ்வெல் 65 பந்தில் 14 பவுண்டரி, 9 சிக்சருடன் 145 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 27 பந்தில் அரைசம் கடந்த மேக்ஸ்வெல் 49 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.
ஹெட் 18 பந்தில் 45 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். கவாஜா 22 பந்தில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் 264 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தில்ஷான் முதல் ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், ரன் ரேட்டும் 10 என்ற விகிதத்தில் இருந்து வந்தது.
இருப்பினும் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சண்டிமால் 58(43) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடையில் கபுஜெடரா அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க், போலாடு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
145 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றது.

Next Story
×