search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட்டை விட கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்கெய்ல் அறிவுரை
    X

    கிரிக்கெட்டை விட கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்கெய்ல் அறிவுரை

    சென்னையில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கிறிஸ் கெய்ல் கிரிக்கெட்டை விட கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
    சென்னை:

    உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கிறிஸ்கெய்ல். வெஸ்ட்இண்டீசை சேர்ந்த இவர் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கிறிஸ் கெய்ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.18 லட்சம் ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் மாணவ-மாணவிகள் மத்தியில் கிறிஸ் கெய்ல் பேசியதாவது:-

    வாழ்க்கையில் வெற்றி பெற மாணவ-மாணவிகள் கடினமாக உழைக்க வேண்டும். இதில் சில நேரங்களில் தோல்வியும் ஏற்படலாம். வாழ்க்கையில் வெற்றி-தோல்வியை ஒரே மாதிரியாக கருத வேண்டும்.

    குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். கடினமாக உழைத்தால் பிரதமர், ஜனாதிபதி, விராட்கோலி ஆக முடியும்.

    மாணவர்கள் கிரிக்கெட்டை விட கல்விக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதில் தான் நிறைய சாதனைகளை படைக்க இயலும்.

    சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் எனக்கு பிடித்த ஒன்றாகும். மிகவும் அற்புதமான மைதானமாகும்.

    எனக்கு பிடித்த ஆசிரியர் ஆங்கிலப் பாடம் கற்றுக் கொடுத்தவர் ஆவார். அவருக்கு இந்த நேரத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×