என் மலர்

  செய்திகள்

  கரீபியன் பிரீமியர் லீக்: கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணி சாம்பியன்
  X

  கரீபியன் பிரீமியர் லீக்: கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணி சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஒரு மாத காலமாக கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. அதில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், எம்ரிட் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

  டாஸ் வென்ற தல்லாவாஸ் அணி கேப்டன் கெய்ல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி கயானா அணியின் ஸ்மித், மேடின்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மேடின்சன் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லைன் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஸ்மித் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

  4-வது வீரராக களம் இறங்கிய சோஹைல் தன்வீர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 42 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கயானா அணி 16.1 ஓவரில் 93 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. ஜமைக்கா அணி சார்பில் இமாத் வாசிம் 3 விக்கெட்டும், சாஹிப் அல் ஹசன், வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.  பின்னர் 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா அணியின் கேப்டன் கெய்ல் மற்றும் வால்டன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வால்டன் ஒருபுறம் நிதானமாக விளையாட, மறுமுனையில் கெய்ல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். ஜமைக்கா அணியின் ஸ்கோர் 9.4 ஓவரில் 79 ரன்கள் எடுத்திருக்கும்போது கெய்ல், 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து சங்ககரா களம் இறங்கினார்.

  இந்த ஜோடி 12.5 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தது. இதன்மூலம் 2-வது முறையாக ஜமைக்கா அணி பிரீமியர் லீக் தொடரை வென்றது. வால்டன் 25 ரன்னுடனும், சங்ககரா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்திய ஜமைக்கா அணியின் இமாத் வாசிம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அந்த அணியின் ஆன்ட்ரே ரஸல் தொடர் நாயகன் விருது பெற்றார்.
  Next Story
  ×