என் மலர்

  செய்திகள்

  தில்ருவான் பெரேரா சைலன்ட் ஹீரோ: மேத்யூஸ் புகழாரம்
  X

  தில்ருவான் பெரேரா சைலன்ட் ஹீரோ: மேத்யூஸ் புகழாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காலே டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தில்ருவான் பெரேரா. அவர் ஒரு சலைன்ட் ஹீரோ என்று மேத்யூஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
  காலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேராதான். இவர் 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 2-வது இன்னிங்சில் அரைசம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்திய பெரேரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பெரேராவை ‘அமைதியான ஹீரோ (Silent Here)’ என்று அணியின் கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.

  பெரேரா குறித்து மேத்யூஸ் கூறுகையில் ‘‘இந்த தொடரில் நாம் பெரும்பாலும் ரங்கனா ஹெராத் பற்றிதான் பேசினோம். ஆனால், தில்ருவான் பற்றி பேசவில்லை. அவர் அதிவேகமாக 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

  இலங்கை அணியில் முரளீதரன் விளையாடியபோது, நாம் ரங்கனா ஹெராத் பற்றி பேசவில்லை. அதேபோல்தான் தற்போது நாம் தில்ருவான் பற்றி பேசவில்லை. அவர் ஒரு அமைதியான ஹீரோ.

  கடந்த போட்டியில் (பல்லேகெலே) தில்ருவான் சிறப்பாக பந்து வீசவில்லை. ஆனால், காலேயில் எப்படி பந்து வீச வேண்டும் என்று தெரிந்து கொண்டு கடுமையாக பயிற்சி செய்தார். அணி பயிற்சியாளருடன் இணைந்து கடுமையான பயிற்சி மேற்கொண்டார். வரும் காலங்களில் இலங்கை அணிக்கு அவருடைய பங்களிப்பு அதிக அளவில் இருக்கும்’’ என்றார்.
  Next Story
  ×