என் மலர்

  செய்திகள்

  கேப்டனாக கோலி செய்த தவறுகள்: சுட்டிக்காட்டிய சவுரவ் கங்குலி
  X

  கேப்டனாக கோலி செய்த தவறுகள்: சுட்டிக்காட்டிய சவுரவ் கங்குலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது போட்டி டிரா ஆன நிலையில், கேப்டன் கோலியின் தவறுகளை முன்னாள் கேப்டன் கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
  இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ராஸ்டன் சேஸின் அபாரமான சதம், பிளாக்வுட், டவ்ரிச், ஹோல்டரின் சிறப்பான ஆட்டத்தினால் டிரா செய்தது.

  இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியின் சில தவறுகளை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்து தனியார் சேனல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:-

  உமேஷ் யாதவை கோலி இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்திருக்கலாம். அவருக்கு 12 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. உமேஷ் யாதவை ஒரு ஆக்ரோஷமான பந்து வீச்சாளராக கோலி பயன்படுத்துவது அவசியம். உமேஷ் யாதவை விக்கெட் வீழ்த்தும் பவுலராக கோலி பயன்படுத்த வேண்டும். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன.

  அதேபோல் அமித் மிஸ்ராவுக்கு முன்பாகவே அஸ்வினை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். சில வேளைகளில் 5 பவுலர்கள் கொண்டு ஆடுவது ஒரு பவுலரை சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விடும். தொடர் இப்படியாக திரும்புவதை நான் பார்த்திருக்கிறேன். இந்தப் போட்டிக்கு பிறகு சூழ்நிலை நிச்சயம் வித்தியாசமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

  ஆனால் என்ன வேண்டுமானாலும் நாம் கூறி தேற்றிக் கொண்டாலும் ராஸ்டன் சேஸ், பிளாக்வுட், டவ்ரிச் ஹோல்டர் மன உறுதியுடன் ஆடி நம்மை ஆச்சரியப்படுத்தியதை நாம் மறக்க முடியாது.

  ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு 20 இந்திய விக்கெட்டுகளை வீழ்த்துமா? என்பது சந்தேகமே, ஆகவே இந்தியா தொடரை வெல்லும் என்று தெரிகிறது.

  அடுத்த போட்டிக்கும் அணியில் மாற்றமிருக்காது. செயின்ட் லூசியா முடிவு தெரியும் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கோலி பவுலர்களை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×