என் மலர்

  செய்திகள்

  நடுவர்களிடம் முறைப்பு: மன்னிப்பு கேட்ட ஆண்டர்சன்
  X

  நடுவர்களிடம் முறைப்பு: மன்னிப்பு கேட்ட ஆண்டர்சன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின்போது ஆண்டர்சன் நடுவர்களிடம் முறைத்துக் கொண்டார். இதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
  இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 297 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்து பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில் ஆண்டர்சன் ஹபீஸை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

  அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு சமி அஸ்லாம் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஆண்டர்சன் பந்து வீச்சை சமாளித்து விளையாடியது.

  இதனால் 2-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது. ஆண்டர்சன் தொடர்ந்து பந்து வீசி அலுத்துப்போனார். ஒரு நேரத்தில் பந்து வீசிவிட்டு ஆடுகளத்திற்குள் தடைசெய்யப்பட்ட இடத்தில் ஓடினார். இதனால் நடுவர் புருஸ் ஆக்சன்போர்டு எச்சரிக்கை விடுத்தார். மேலும், அதேபோல் செய்யவே மறுமுனையில் இருந்த நடுவரும் எச்சரிக்கை செய்தார். இன்னொருமுறை இப்படி செய்தால் முதல் இன்னிங்சில் பந்து வீச தடைவிதிக்கப்படும் என்றனர். டிவி நடுவர் குமார் தர்மசேனா கள நடுவரை வலியுறுத்தியதால் ஆண்டர்சன் எச்சரிக்கப்பட்டார்.

  ஏற்கனவே, விக்கெட்டுக்களை வீழ்த்த முடியவில்லை என்ற விரக்தியில் இருந்த ஆண்டர்சன் நடுவர் எச்சரிக்கையால் கடுப்பாகி அவர்களை முறைத்து பார்க்க தொடங்கினார்.

  இதனால் கள நடுவர்கள் இதுகுறித்து புகார் செய்தனர். ஆட்டம் முடிந்து ரீப்ளே பார்த்ததில் தனது தவறை ஒப்புக்கொண்ட ஆண்டர்சன் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

  இதுகுறித்து ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இது எனக்கு விரக்தியான நாள். இந்த செயலில் ஈடுபட்ட அந்த அரைமணி நேரம் எனக்கு மோசமான நேரம். என்னுடைய செயல் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருப்பதால், இரு நடுவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.
  Next Story
  ×