என் மலர்

  செய்திகள்

  புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: ஜார்க்கண்ட் அணியின் ஆலோசகரானார் டோனி
  X

  புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: ஜார்க்கண்ட் அணியின் ஆலோசகரானார் டோனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட் அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் டோனி செயல்படுகிறார்.
  இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மகேந்திர சிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் அவருக்கு அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது.

  இந்த ஓய்வு நேரத்தில் ஜார்க்கண்ட் அணிக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று  (5-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை புச்சி பாபு ஆல் இந்தியா இன்விடேஷனல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

  இந்த தொடரில் டோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மாநில அணியும் பங்கேற்கிறது. இந்த அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் முகாமிற்கு டோனி சென்றார். அங்கு சென்ற அவர் இளம் வீரர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். டோனியை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற வாய்ப்பு கிடைத்ததால் ஜார்க்கண்ட் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

  இந்த தொடர் தொடங்கும்போது டோனி ஆலோசகராக செயல்படுவார் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் அவர் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால், 12-ந்தேதியில் இருந்து அணியுடன் இணைவார் என்று ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் அசோசியேசன் செயலாளர் ராஜேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

  இந்த தொடரில் ஜார்க்கண்ட் அணியுடன் ஐதராபாத், சத்தீஸ்கர், ரெயில்வே, உத்தர பிரதேசம் அணிகளும் பங்கேற்கின்றன. அத்துடன் உள்ளூர் அணியான தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய லெவன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய மாவட்ட லெவன் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.
  Next Story
  ×