search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டு எறியும் வீரர் ஊக்க மருந்தில் சிக்கினார்: இந்தர்ஜித் ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகம்
    X

    குண்டு எறியும் வீரர் ஊக்க மருந்தில் சிக்கினார்: இந்தர்ஜித் ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகம்

    மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்தில் சிக்கிய நிலையில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற மேலும் ஒரு வீரர் சிக்கலில் மாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரேசிலில் ஒலிம்பிக் போட்டி தொடங்க 10 தினங்கள் இருக்கும் நிலையில் ஊக்க மருந்து விவகாரம் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்தில் சிக்கிய நிலையில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற மேலும் ஒரு வீரர் சிக்கலில் மாட்டியுள்ளார்.

    பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தடகளத்தில் இருந்து 36 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருந்தனர். இவர்களில் குண்டு எறியும் வீரர் இந்தர்ஜித்சிங்கும் ஒருவராவார்.

    இந்த நிலையில் இந்தர்ஜித் சிங் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான அவரிடம் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த போட்டியின் போது சோதனை நடத்தப்பட்டது.

    அவர் ஸ்டிராய்ட் எனும் ஊக்க மருந்தை உட்கொண்டு இருந்தது சோதனையில் தெரியவந்தது. தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் கடிதம் மூலம் இந்திய தடகள சம்மேளனத்துக்கு தெரிவித்துள்ளது.

    ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரத்தால் இந்தர்ஜித் சிங் பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே.

    ஏற்கனவே நரசிங் யாதவ் ஊக்க மருந்தால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இந்தர்ஜித்சிங் 2-வது வீரராக சிக்கியுள்ளர்.

    கடந்த ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கிராண்ட் பிரி, உலக பல்கலைக்கழக விளையாட்டு ஆகியவற்றில் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே ஊக்க மருந்து விவகாரத்தில் தனக்கு எதிராக திட்டமிட்ட சதி நடப்பதாக இந்தர்ஜித்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
    Next Story
    ×