என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவாஸ்கரின் 10 ஆயிரமாவது ரன் டேப் மாயம்: தூர்தர்ஷன் அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
Byமாலை மலர்26 July 2016 5:47 AM GMT (Updated: 26 July 2016 5:47 AM GMT)
இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடந்த 1987-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின்போது வரலாற்று சிறப்புமிக்க தனது பத்தாயிரமாவது ஓட்டத்தை பதிவு செய்த ஒளிநாடாவை (டேப்) காணவில்லை என தூர்தர்ஷன் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

இதுதொடர்பாக, பிரபல ஆங்கில பத்திரிகை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள தூர்தர்ஷன் நிர்வாகம், ‘இதுதொடர்பான வீடியோ டேப் எங்களிடம் இல்லை’ என தெரிவித்துள்ளது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தனியார் டி.வி.க்களின் ஆதிக்கம் உருவாவதற்கு முன்னர் அனைத்து முக்கியமான விளையாட்டு போட்டிகளையும் இந்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷன் சேனல்தான் ஒளிபரப்பி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கடந்த 1987-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டிகள் மற்றும் 1987-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட சில முக்கிய பதிவுகளும் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
இதுபற்றிய தகவல் வெளியானதும், வரலாற்று சிறப்புமிக்க தனது பத்தாயிரமாவது ரன் தொடர்பான வீடியோ டேப் காணாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், இதற்கு முன்னர் தொழில்நுட்பம் பெரிதாக வளர்ச்சி அடையாத நிலையில் சில கோப்பு காட்சிகளை பாதுகாக்க முடியாமல் போய் இருக்கலாம். சில டேப்கள் தவறிப்போய் இருக்கலாம்.
ஆனால், தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள தற்போதாவது பழைய முக்கியமான கோப்புகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
×