என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யூரோ கோப்பையில் கலக்கிய போக்பாவின் வாரச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Byமாலை மலர்23 July 2016 1:16 PM GMT (Updated: 23 July 2016 1:16 PM GMT)
யூரோ கால்பந்து கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடிய மிட்பீல்டர் பால் போக்பாவின் வாரச்சம்பளம் சுமார் 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற அந்த அணியின் முன்கள வீரர் கீரிஸ்மானும், மிட்பீல்டர் பால் போக்பாவும்தான் முக்கிய காரணம்.
யூரோ கோப்பைக்குப்பின் 23 வயதாகும் போக்பா மீது இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் பார்வை விழுந்துள்ளது.
போக்பா தற்போது இத்தாலியின் முன்னணி கிளப்பான ஜூவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2011-12-ல் போக்பா மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகத்தான் விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடிய அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை.
அதன்பின் ப்ரீ டிரான்ஸ்பர் மூலமாக ஜூவான்டஸ் அணியில் இணைந்தார். அந்த அணிக்காக 124 போட்டிகளில் விளையாடி 28 கோல்கள் அடித்துள்ளார். பல கோல்கள் அடிப்பதற்கு துணைபுரிந்துள்ளார்.
இவர் ஜூவான்டஸ் அணியில் இணைந்த 2012-ல் இருந்து அந்த அணி ‘செரியே ஏ’ தொடர், இரண்டு முறை கோபா இத்தாலி, இரண்டு முறை சூப்பர்கோபா இத்தாலி கோப்பையை வென்றுள்ளது. 2013-ல் கோல்டன் பாய் விருதை பெற்றுள்ளார்.
தற்போது மீண்டும் மான்செஸ்டர் அணி போக்பாவை வாங்க பேரம் பேசியது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மான்செஸ்டர் போக்பாவை விடுவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது போக்பாவை விட்டுக்கொடுக்க ஜூவான்டஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக மான்செஸ்டர் 100 மில்லியன் பவுண்டு வழங்க இருக்கிறது. இந்த ஒப்பந்தம் நடைபெற்றால் மான்செஸ்டரின் அதிகபட்ச டிரான்ஸ்பர் இதுவாகத்தான் இருக்கும்.
அத்துடன் போக்பாவிற்கு வாரத்திற்கு 2,20,000 பவுண்டு வழங்க மான்செஸ்டர் சம்மதித்துள்ளது. இந்த சம்பளம் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 1,93,42,415 ஆகும். ஒரு தொடரில் பிரபலம் அடைந்ததால் போக்பா சுமார் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருக்கிறார்.

Next Story
×