search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு
    X

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் ஒரு வருடம் நீடிப்பார்.
    தரம்சாலா:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் இருந்து இறுதியாக 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களிடம் கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலி, சச்சின், லஷ்மண்) நேர்காணல் நடத்தியது. நேற்று முன்தினமும் நேற்றும் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோரிடம் இறுதிக்கட்ட நேர்காணல் நடத்தியது.

    பின்னர், யாரை தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம என்ற பரிந்துரையை பி.சி.சி.ஐ.க்கு அனுப்பி வைத்தது. இதன் அடிப்படையில் இன்று மாலை 6 மணியளவில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தலைமை பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    அப்போது ‘‘கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஒரு வருடமாக இருக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×