என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனியின் சாதனை
Byமாலை மலர்23 Jun 2016 9:11 AM IST (Updated: 23 Jun 2016 9:11 AM IST)
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றியை அடுத்து இந்தியா 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயும், 2-வது ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. கேதர் ஜாதவ் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய பரிந்தர் ஸ்ரன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். முன்னதாக ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது நினைவிருக்கலாம்.
இந்திய அணி அடுத்து ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
* கேப்டனாக டோனி பங்கேற்ற 324-வது சர்வதேச போட்டி இதுவாகும். இதன் மூலம் அதிக சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார். 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற டோனி இதுவரை 60 டெஸ்ட், 194 ஒரு நாள் போட்டி மற்றும் 70 இருபது ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
* 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்கோரை இலக்காக வைத்து இந்திய அணி பெற்ற வெற்றியாக இது பதிவானது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிராக முதலில் பேட் செய்து 146 ரன்கள் எடுத்து, அதில் வெற்றி பெற்றதே இந்த வகையில் இந்தியாவின் சிறப்பானதாக இருந்தது.

Next Story
×