என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-முறையாக யூரோ கோப்பையை வெல்லும் பசியில் உள்ளோம்: ஸ்பெயின் வீரர் பேஃப்ரிகேஸ் சொல்கிறார்
Byமாலை மலர்7 Jun 2016 1:02 PM GMT (Updated: 7 Jun 2016 1:02 PM GMT)
ஸ்பெயின் நாட்டின் நடுகள வீரராக இருப்பவர் 29 வயதான பேஃப்ரிகேஸ். ஸ்பெயின் இந்த வருடம் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து 3-வது முறையாக வெல்லும் பசியில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கு இணையாக கருதப்படுவது ஐரோப்பிய சாம்பியன்ஷி்ப் கால்பந்து தொடர். இந்த தொடர் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடைபெறும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் கடந்த இரணடு முறை ஸ்பெயின் சாம்பயின் பட்டம் வென்றுள்ளது.
தற்போது மூன்றாவது முறையாக இந்த கோப்பையை வெல்லும் ஆசையில் ஸ்பெயின் உள்ளது. ஆனால், பிரேசிலில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறிய ஸ்பெயின் அணிக்கு இந்த முறை ‘யூரோ கோப்பை’ கடும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இருந்தாலும் இந்த கோப்பையை நாங்கள் வெல்லும் பசியில் உள்ளோம் என அந்த அணியின் நடுகள வீரர் பேஃப்ரிகேஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேஃப்ரிகேஸ் கூறுகையில் ‘‘எங்களது அணி முகாமில் நல்ல உணர்வு உள்ளது. ஒவ்வொருவரும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கடும் பசியில் உள்ளதை நான் பார்க்கிறேன். எதாவது பெரியதாக செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எங்கள் ஒவ்வொருக்குமிடையில், நாம் இந்த தொடரில் அதிக்கம் செலுத்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது தேவை.
யூரோ கோப்பை நமக்கு சாதகமாக இருக்குமேயானால் அந்த விஷயமே அல்ல. நாம் ஒவ்வொரு போட்டியையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு எதிர் அணியும் ஸ்பெயினை வீழ்த்தி வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் நம்முடைய சிறந்த விளையாட்டை கொடுக்க வேண்டும்’’ என்றார்.
யூரோ 2016 கோப்பையில் ஸ்பெயின் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ஜூன் 13-ந்தேதி தனது முதல் போட்டியில் செக் குடியரசை எதிர்கொள்கிறது. இதே அணியில் துருக்கி, குரோஷியா அணிகளும் இடம்பிடித்துள்ளன.
2006-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் அணிக்காக விளையாடி வரும் பேஃப்ரிகேஸ் 105 கோல்கள் அடித்துள்ளார்.

Next Story
×