என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்சு ஓபனில் சாம்பியன்: அனைத்து கிராண்ட்சிலாமை வென்ற 8-வது வீரர் ஜோகோவிச்
Byமாலை மலர்6 Jun 2016 9:57 AM GMT (Updated: 6 Jun 2016 9:57 AM GMT)
பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் பெற்ற நோவக் ஜோகோவிச், அனைத்து கிராண்ட்சிலாமை வென்ற 8-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஓன் வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். செர்பியாவை சேர்ந்த அவர் 3-6, 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் இரண்டாம் நிலை வீரரான ஆன்டி முர்ரேயை (இங்கிலாந்து) வீழ்த்தினார்.
ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை தற்போதுதான் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் அனைத்து கிராண்ட்சிலாம் பட்டத்தை (ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) வென்ற 8-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்பு ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ராய் எமர்சன், ராட்லாவர் (ஆஸ்திரேலியா), பிரெட் பெர்ரி (இங்கிலாந்து), ஆந்த்ரே அகாசி, டான்பட்ஜ் (அமெரிக்கா) ஆகியோர் 4 கிராண்ட்சிலாம் பட்டங்களையும் வென்று இருந்தனர்.
ஜோகோவிச் கைப்பற்றிய 12-வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அவர் ராட்லாவரை முந்தி ராய் எமர்சனுடன் இணைந்து 3-வது இடத்தை பிடித்தார்.
ரோஜர் பெடரர் 17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் உள்ளார். பீட் சாம்ராஸ், ரபெல் நடால் தலா 14 கிராண்ட்சிலாம் பட்டத்தோடு அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

Next Story
×