என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் பெண்கள் மாரத்தான் ஓட்டம்: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Byமாலை மலர்6 Jun 2016 1:28 AM GMT (Updated: 6 Jun 2016 1:28 AM GMT)
சென்னையில் பெண்கள் மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சென்னை :
மார்பக புற்றுநோய் பிரச்சினைகள் குறித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் ‘பிங்கதான்’ என்னும் பெயரில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னை தீவுத்திடலில் பிங்கதான் மாரத்தான் ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தை தென் பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர் சிங், சினிமா நடிகர் மிலிண்ட் சோமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் 6 வயது முதல் 60 வயதை தாண்டிய பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ. மற்றும் 21 கி.மீ. என 4 பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. காலை 5 மணி முதல் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாரத்தானில் பங்கேற்ற பெண்களுக்கு ஓட்ட தூர பாதைகளை அடையாளம் காட்டுவதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். இதில் பார்வையற்ற, காதுகேளாத இளம்பெண்களும் கும்பல் கும்பலாக ஓடினார்கள். மாரத்தானில் பங்கேற்ற பெண்களுக்கு ஆங்காங்கே குடிநீர், ஜூஸ் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்பட்டன.
மாரத்தானில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பிரிவு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன. இது தவிர 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை (மெமோகிராம்) செய்யப்பட்டது.பிங்கதான் என்னும் பெண்கள் மாரத்தான் ஓட்டத்துக்காக நேற்று அதிகாலை 4.45 மணி முதலே போக்குவரத்தில் லேசான மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மெரினா காமராஜர் சாலையின் இடதுபுறம் தனிப்பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. அண்ணாசதுக்கத்துக்கு செல்லும் பஸ்கள், கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை அருகிலேயே நிறுத்தப்பட்டன. அத்துடன் சேவையும் முடித்து கொள்ளப்பட்டன. காலை 8.30 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது.

Next Story
×