என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: முதல் போட்டியில் சத்தீஸ்கர் பெண்கள் அணி வெற்றி
Byமாலை மலர்28 May 2016 9:04 AM IST (Updated: 28 May 2016 9:04 AM IST)
கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் சத்தீஸ்கர் பெண்கள் அணி வெற்றி பெற்றது.
கோவை
51-வது ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 15-வது பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கியது. வருகிற 1-ந் தேதி வரை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கூடைபந்து போட்டிகள் நடைபெறுகிறது.
முதல் நான்கு நாட்கள் சுழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.
ஆண்கள் பிரிவில் டெகராடூன் ஓ.என்.ஜி.சி. அணி, கேரள மின்வாரிய அணி, சென்னை ஐ.சி.எப். அணி, சென்னை வருமான வரி அணி, கேரள போலீஸ் அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணிகள் உள்பட 9 அணிகளும், பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் மாநில அணி, சென்னை தெற்கு ரெயில்வே அணி, கேரள மின்வாரிய அணி, கோவை மாவட்ட அணி உள்பட 8 அணிகளும் கலந்து கொள்கின்றன.
நேற்று மாலை 5 மணிக்கு போட்டிகள் தொடங்கின. ஆண்கள் பிரிவில் ஓ.என்.ஜி.சி. அணியும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணியும் மோதின. இதில் ஓ.என்.ஜி.சி. அணி 66-31 என்ற புள்ளிக்கணக்கில் கோவை அணியை வென்றது. ஓ.என்.ஜி.சி. அணியின் விக்னேஷ்(18 புள்ளி), மோகித் 15 புள்ளிகளையும் ஈட்டினார்கள்.
பெண்கள் பிரிவில் சத்தீஷ்கர் அணி 87-70 புள்ளிகளில் மத்திய ரெயில்வே அணியை வென்றது. அதைத் தொடர்ந்து மற்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றது. போட்டிகள் இன்றும் (சனிக் கிழமை) நடக்கிறது.

Next Story
×