என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கொல்கத்தா-பெங்களூர் இன்று மோதல்: ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பது யார்?
Byமாலை மலர்2 May 2016 11:57 AM IST (Updated: 2 May 2016 11:57 AM IST)
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா-பெங்களூர் இரு அணிகளும் தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளதால், இன்று வெற்றிக்கு கடுமையாக வீரர்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர்:
ஐ.பி.எல். போட்டியின் 30–வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4–வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணியை வீழ்த்தி 5–வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. கடைசியாக விளையாடிய 2 ஆட்டத்தில் தோற்றதால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயமும் அந்த அணிக்கு உள்ளது.
கேப்டன் காம்பீர், உத்தப்பா, சூர்யா குமார் யாதவ், யூசுப்பதான் ரஸ்சல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், சுனில் நரீன், உமேஷ் யாதவ், பியூஸ் சாவ்லா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
பெங்களூர் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. ஐதராபாத் (45 ரன்), புனே (13 ரன்) அணிகளை வென்றது. டெல்லி (7 விக்கெட்), மும்பை ( 6 விக்கெட்), குஜராத் (6 விக்கெட்), ஐதராபாத் (15 ரன்) அணிகளிடம் தோற்றது.
கடைசியாக ஆடிய 2 ஆட்டத்தில் பெங்களூர் அணி தோற்று இருந்தது. இதனால் அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் வலுவாக இருக்கும் பெங்களூர் அணி பந்துவீச்சில் பலவீனத்துடன் காணப்படுகிறது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா 8 போட்டியிலும், பெங்களூர் 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Next Story
×