என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
வேலை வாய்ப்புகள் நிறைந்த ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்
- 'ஸ்டார் ஓட்டல்கள்' எனப்படும் மிகவும் வசதி வாய்ப்புகள் உள்ள ஓட்டல்கள் சிறு நகரங்களில் கூட இப்போது ஏராளமாக உள்ளன.
- நேஷனல் கவுன்சில் பார் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி என்னும் அமைப்பு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களையே ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளுகிறது.
உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. மாறி வருகின்ற சூழலுக்கு ஏற்ப நமது பணிகளையும், படிக்கின்ற படிப்பையும், தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இன்றைய இளைஞர்கள் உள்ளார்கள்.
எந்தப் படிப்பை படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்? எந்தக் கல்லூரியில் சேர்ந்தால் சுலபமாக நல்ல பதவியில் சேரலாம்? எதிர்காலத்தில் எந்தெந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது? என பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை தெரியாமல் தவிக்கின்ற இளம் மாணவ மாணவிகளும் உண்டு.
எந்த படிப்பை படித்தாலும் அந்த படிப்பில் மிகச்சிறந்தவர்களாக, அதிக மதிப்பெண்கள் பெற்று திறமைகளை வளர்த்துக் கொண்டவர்கள் நிச்சயமாக எளிதில் வேலை பெறலாம்.
'ஸ்டார் ஓட்டல்கள்' எனப்படும் மிகவும் வசதி வாய்ப்புகள் உள்ள ஓட்டல்கள் சிறு நகரங்களில் கூட இப்போது ஏராளமாக உள்ளன.
இந்த ஓட்டலில் இப்போது பணிபுரிய தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்கள் ஏராளமாக தேவைப்படுகிறார்கள். இதனால் 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' பற்றிய படிப்பு மிகவும் பிரபலமாகி வருகிறது.
உலகெங்கும் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது சுற்றுலா துறையோடு ஓட்டல் மேனேஜ்மென்ட் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களும், பிளஸ் டூ முடித்தவர்களும், பட்டப்படிப்பு படித்தவர்களும் சேர்ந்து படிக்கும் வகையில் பல்வேறு ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் உள்ளன.
ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்புகள்
பிளஸ் டூ படித்தவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பல்வேறு பட்டப் படிப்புகள் ஓட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில் நடத்தப்படுகிறது. அவற்றுள் சில.....
1.பேச்சுலர் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் ( BACHELOR OF HOTEL MANAGEMENT)
2. பேச்சுலர் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (BACHELOR OF HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY)
3. பி.எஸ்.சி இன் ஹாஸ்பிடல் அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் (B.SC IN HOSPITAL AND HOTEL MANAGEMENT)
4. பி.ஏ. இன் ஓட்டல் மேனேஜ்மென்ட். (B.A. IN HOTEL MANAGEMENT)
5. பி.எஸ்.சி. கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் ( B.Sc CATERING SCIENCE AND HOTEL MANAGEMENT)
5.பி.எஸ்.சி. ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் (B.Sc HOSPITALITY MANAGEMENT)
6. பி.எஸ்.சி. ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் (B.Sc HOSPITAL ADMINISTRATION)
7. பி.பி.ஏ. இன் ஹாஸ்பிடல் டிராவல் அண்ட் டூரிசம் (B.B.A. IN HOSPITAL, TRAVEL AND TOURISM.
8. பி.எஸ்சி. இன் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் கேட்டரிங் சர்வீசஸ் ( B.Sc IN HOSPITALITY AND CATERING SERVICES)
9. பேச்சுலர் இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (BACHELOR IN HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY)
ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்ட மேற்படிப்புகள் (HOTEL MANAGEMENT POST GRADUATE DEGREE COURSES)
ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்பு படித்தவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பல்வேறு 'ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்ட மேற்படிப்புகள்' நடத்தப்படுகிறது. அவற்றுள் சில.....
1. மாஸ்டர் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் (MASTER OF HOTEL MANAGEMENT)
2 மாஸ்டர் இன் டூரிசம் அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் (MASTER IN TOURISM AND HOTEL MANAGEMENT)
3. எம்.பி.ஏ. இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் (M.B.A IN HOTEL MANAGEMENT)
4. எம்.பி.ஏ. இன் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் (M.B.A IN HOSPITALITY MANAGEMENT)
5. எம்.எஸ்.சி. டூரிசம் அண்டு ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் (M.Sc. IN TOURISM AND HOSPITALITY MANAGEMENT)
ஓட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்புகள்:
ஓட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்புகளில் பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம்.
1. டிப்ளமோ இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் (DIPLOMA IN HOTEL MANAGEMENT)
2. டிப்ளமோ இன் ஓட்டல் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் (DIPLOMA IN HOTEL AND HOSPITALITY MANAGEMENT)
3. டிப்ளமோ இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (DIPLOMA IN HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY)
4. டிப்ளமோ இன் பிரண்ட் ஆபீஸ் ஆபரேஷன் (DIPLOMA IN FRONT OFFICE OPERATION)
5. டிப்ளமோ இன் புட் அன்ட் பிவரேஜ் சர்வீஸ். (DIPLOMA IN FOOD AND BEVERAGE SERVICE)
6. டிப்ளமோ இன் புட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி. (DIPLOMA IN FOOD AND CATERING TECHNOLOGY)
7. டிப்ளமா இன் பேக்கரி புரொடக்ஷன் (DIPLOMA IN BAKERY PRODUCTION)
8. டிப்ளமோ இன் பேக்கரி அண்ட் கன்பிரக்சனரி (DIPLOMA IN BAKERY AND CONFECTIONERY)
9. டிப்ளமோ இன் ஹவுஸ்கீப்பிங் (DIPLOMA IN HOUSE KEEPING)
10. டிப்ளமோ இன் பேக்கரி ஆபரேஷன்ஸ் (DIPLOMA IN BAKERY OPERATIONS)
11. டிப்ளமோ இன் ஹவுஸ் கீப்பிங் ஆபரேஷன்ஸ் (DIPLOMA IN HOUSE KEEPING OPERATIONS)
ஓட்டல் மேனேஜ்மென்ட் சான்றிதழ் படிப்புகள். (HOTEL MANAGEMENT DIPLOMA COURSES)
ஓட்டல் மேனேஜ்மென்ட் சான்றிதழ் படிப்புகளில் பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம். அவற்றுள் சில...
1. சர்டிபிகேட் இன் புட் அண்ட் பிவரேஜ் புரொடக்ஷன் (CERTIFICATE IN BEVERAGE PRODUCTION)
2. சர்டிபிகேட் இன் பிரண்ட் ஆபீஸ் ஆபரேஷன் (CERTIFICATE IN FRONT OFFICE OPERATION )
3. சர்டிபிகேட் இன் ஹவுஸ் கீப்பிங் ( CERTIFICATE IN HOUSE KEEPING)
4. சர்டிபிகேட் இன் ஓட்டல் அண்டு கேட்டரிங் மேனேஜ்மென்ட். (CERTIFICATE IN HOTEL AND CATERING MANAGEMENT)
5. கிராப் பேன்சிப் கோர்ஸ் இன் புட் புரொடக்ஷன்
6. சர்டிபிகேட் இன் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் (CERTIFICATE IN HOSPITALITY MANAGEMENT)
7. கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன் புரொடக்ஷன் மேனேஜ்மென்ட் (CRAFTSMANSHIP COURSE IN PRODUCTION MANAGEMENT)
8. சர்டிபிகேட் இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் (CERTIFICATE IN HOTEL MANAGEMENT)
ஏராளமான வேலை வாய்ப்புகள்:
ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக,
1. ஓட்டல் மேனேஜர்
2. ரெஸ்டாரன்ட் மேனேஜர்
3. ஈவன் மேனேஜர்
4. எக்சிக்யூட்டிவ் செப்
5. ஈவண்ட் கோஆர்டினேட்டர்
6. ஹவுஸ் கீப்பிங் மேனேஜர்
7. ஓட்டல் டைரக்டர்
8. ரிசார்ட் மேனேஜர்
9. சீப் செம்மோலியர் (sommelier)
10. கேட்டரிங் சூப்பர்வைசர்
11. மார்க்கெட்டிங் அண்ட் சேல்ஸ் எக்சிக்யூட்டிவ்
12. கேபின் க்ரு (cabin crew)
13. கிச்சன் செப்
14. கேட்டரிங் சூப்பர்வைசர்
15. பிரண்ட் பெஸ்ட் ஆபீசர்
16. புட் அண்ட் பிவரேஜ் சூப்பர்வைசர்
17. கேட்டரிங் ஆபீசர்.
18. ரெஸ்டாரன்ட் மேனேஜர்
ஓட்டலில் பணிபுரிய தேவையான குணங்கள் மற்றும் திறமைகள்:
ஓட்டலில் பல்வேறு பதவிகளில் பணிபுரிய சில சிறப்பு திறமைகள் மற்றும் குணங்கள் கண்டிப்பாக தேவை. அவற்றுள் சில...
1. தகவல் தொடர்பு திறன்
2. தலைமைப் பண்புகள்
3. பொறுமை
4. பிறரோடு இணைந்து பழகும் தன்மை
5. விரைவாக முடிவெடுக்கும் திறன்
6. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மனப்பாங்கு மற்றும் திறன்.
நேஷனல் கவுன்சில் பார் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி
(NATIONAL COUNCIL FOR HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY)
நேஷனல் கவுன்சில் பார் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி என்னும் அமைப்பு இந்திய அரசால் 1982- ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு..
1. 21 மத்திய அரசின் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்
2. 28 மாநில அரசு இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்
3. 31 தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள் மற்றும்
4. 12 புட் கிராப்ட் இன்ஸ்டிடியூட்
-ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி நிர்வகித்து வருகிறது.
இவைகள் தவிர இந்த அமைப்பு தனியாக ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பையும் நடத்துகிறது.
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி என்னும் அமைப்பு கீழ்க்கண்ட ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளை நடத்துகிறது.
1. எம்.எஸ்.சி. என் ஹாஸ்பிடாலிட்டி அட்மினி ஸ்ட்ரேஷன்.
2. பி.எஸ்.சி. இன் ஹாஸ்பிடாலிட்டி அட்மினிஸ்ட்ரேஷன்
3. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் அக்காமிடேஷன் ஆபரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்
4. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டயட்ரிக்ஸ் அண்ட் ஹாஸ்பிடல் புட் சர்வீஸ்
5. டிப்ளமோ இன் புட் புரொடக்ஷன்
6. டிப்ளமோ இன் பிரண்ட் ஆபீஸ் ஆபரேஷன்
7. டிப்ளமோ இன் புட் அண்ட் சர்வீஸ்
8. டிப்ளமோ இன் ஹவுஸ் கீப்பிங் ஆபரேஷன்
9. டிப்ளமோ இன் பேக்கரி மற்றும் கன்பெக்ஷனரி
10. கிராப்ஸ் பேன்சிப் சர்டிபிகேட் கோர்ஸ் இன் புரொடக்ஷன்.
11. கிராப்ஸ் பேன்சிப் சர்டிபிகேட் கோர்ஸ் இன் புட் அண்ட் வெவரேஜ்.
சர்வீசஸ்:
நேஷனல் கவுன்சில் பார் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி என்னும் அமைப்பு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களையே ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளுகிறது.
என்.சி.ஹெச்.எம்.சி.டி.ஜே.இ.இ. 2023 என்னும் நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் 15-ந் தேதி இந்த தேர்வு நடைபெற உள்ளது. கம்ப்யூட்டர் உதவியோடு தேர்வுகள் நடத்தப்படும்.
இந்தத் தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் மாதம் 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்வு எழுதலாம்.
மொத்தம் 200 கேள்விகள் நுழைவு தேர்வில் இடம் பெறும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும்.
இந்த நுழைவு தேர்வை என்.டி.ஏ. என அழைக்கப்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்துகிறது.
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு ஆன்லைன் மூலம் 49 நகரங்களில் நடத்தப்படுகிறது.
மொத்தம் 8,124 மாணவ மாணவிகள் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
National Council for Hotel, Management & Catering Technology, A-34, Sector-62, Noida -201309
http://nchm.nic.in/
Toll Free Phone No. 1800 180 3151
Contact Time:- 09.00 AM to 05.30 PM
படிப்புகள் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு, இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்