மாணவர்களுக்கு நற்செய்தி: புதுவை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய படிப்புகள் தொடக்கம்!

இந்த கல்வியாண்டு முதல் இந்த 2 முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்கை நடைபெற உள்ளது. இதன் மூலம் இக்கல்லூரியில் அனைத்து பல் மருத்துவ துறைகளிலும் முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் உள்ளன.
மாணவர்களுக்கு நற்செய்தி: புதுவை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய படிப்புகள் தொடக்கம்!
Published on

புதுச்சேரி கோரிமேட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் இந்த கல்வியாண்டு முதல் மேலும் இரண்டு புதிய முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

அங்கீகாரம்

தேசிய தரவரிசைப் பட்டியலில் (NIRF) தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இடம் பிடித்து சாதனை படைத்து வரும் இந்த அரசு நிறுவனத்திற்கு, மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய பல் மருத்துவ கமிஷன் (National Dental Commission) ஆகியவை புதிய துறைகளைத் தொடங்க தற்போது தங்களின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளன.

புதிய படிப்புகள்

2 ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்த நிறுவனத்தில் இந்த கல்வியாண்டு முதல் பல் சீரமைப்பு துறை, சமுதாய பல் பாதுகாப்புத்துறை ஆகிய 2 துறைகளில் புதிதாக முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் தொடங்குவதற்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய பல் மருத்துவ கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளன.

இதன்படி இந்த கல்வியாண்டு முதல் இந்த 2 முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்கை நடைபெற உள்ளது. இதன் மூலம் இக்கல்லூரியில் அனைத்து பல் மருத்துவ துறைகளிலும் முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் உள்ளன. புதுவை மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல் மருத்துவ நிறுவனத்தின் தலைவரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com