அழகர் சித்தர் கோவிலில் முதலமைச்சர் விஜய்க்கும், தனக்கும் சிலை வைத்து வழிபட்ட வீட்டு வசதி துறை அமைச்சர்

கடலூர் தவெக நிர்வாகிகள் அமைச்சர் ராஜ்குமாருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தென்னம்பாக்கம் வந்த அமைச்சர் ராஜ்குமார் அழகு சித்தரை வழிபட்டார்.
அழகர் சித்தர் கோவிலில் முதலமைச்சர் விஜய்க்கும், தனக்கும் சிலை வைத்து வழிபட்ட வீட்டு வசதி துறை அமைச்சர்
Published on

புதுச்சேரி அருகே உள்ள தென்னம்பாக்கத்தில் அழகர் சித்தர் கோவில் உள்ளது.

அழகு சித்தர் கோவிலில் வேண்டி கொள்பவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் கோவிலில் சிலை வைத்து நேர்த்தி கடன் செலுத்துவர். குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவர்கள் தங்கள் குழந்தை சிலைகளை கோவிலில் வைத்து வழிபடுவர். இதனால் கோவிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான சிலைகள் இருப்பதை காணலாம்.

கடலூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ராஜ்குமார் வீட்டு வசதி, நகர்ப்புற திட்டம், வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றால் அழகு சித்தர் கோவிலில், சிலை வைத்து வழிபடுவதாக வேண்டியிருந்ததார்.

அமைச்சராக பதவி ஏற்ற பின் ராஜ்குமார் முதல் முறையாக கடலூர் வந்தார். கடலூர் தவெக நிர்வாகிகள் அமைச்சர் ராஜ்குமாருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தென்னம்பாக்கம் வந்த அமைச்சர் ராஜ்குமார் அழகு சித்தரை வழிபட்டார்.

அப்போது நேர்த்திக்கடனாகவும், பணிகள் சிறப்பாக தொடரவும், முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தன்னுடைய சிலையை வைத்து வழிபட்டார். அமைச்சருடன் தவெக நிர்வாகிகள் சதீஷ், மகேஷ், சதீஷ்குமார், சத்யராஜ், சவுரிராஜன், மணிகண்டன், தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com