search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
    X

    ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

    ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ரேன்ஜ் ரோவர், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.




    ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ரேன்ஜ் ரோவர், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    கடந்த ஆண்டு லேன்ட் ரோவர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்திருந்தது. ஃபிளாக்ஷிப் ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் முன்பக்கம் ஸ்டைலிங் ட்வீக் செய்யப்பட்டு முன்பை விட சிறப்பாக காட்சியளிக்கிறது. பின்புற பம்ப்பர் வடிவமைப்பு மற்றும் பக்கவாட்டுகளில் உள்ள வென்ட் ட்ரிம்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 

    வழக்கமான எஸ்.யு.வி. மாடல்களில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படும் நிலையில், புதிய மாடலில் அழகிய பிக்சல் எல்இடி மற்றும் பிக்சல்-லேசர் எல்இடிக்களை ஆப்ஷனாக தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்டான்டர்டு மற்றும் நீன்ட-வீல்பேஸ்களிலும் கிடைக்கிறது.

    இரண்டு மாடல்களிலும் கேபின் சிறப்பாக மாற்றப்பட்டு, இருக்கைகள் புதிய ஸ்டைலிங்-ஐ பெற்றிருக்கின்றன. எனினும் எளிதில் கவனிக்கக்கூடிய வகையில் டச் ப்ரோ டுயோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் ரேன்ஜ் ரோவர் வெலார் மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 10.10 இன்ச் செட்டப் கூர்மையான கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது.



    மற்ற அம்சங்களை பொருத்த வரை லெதர் ஸ்டீரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டிங், த்ரி-சோன் கிளைமேட் கன்ட்ரோல், 360-கோண சரவுன்ட் கேமரா (ஆப்ஷன்), டாப்-என்ட் வேரியன்ட்களில் ரேன்ஜ் ரோவர் ஸ்க்ரிப்ட் கொண்ட அலுமினியம் ட்ரெட் பிளேட்கள், ஏர் கேபின் ஐயோனைசேஷன் செய்யப்பட்டுள்ளது. இது கேபினுள் வரும் காற்றை சுத்தம் செய்கிறது.

    இத்துடன் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கியூ அசிஸ்ட் வசதி கொண்டுள்ளது. ஜெஸ்ட்யூர் சன் பிளைன்ட் மற்றும் பானரோமிக் ரூஃப் கொண்டிருக்கிறது. எனினும் இவை விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. கூடுதலாக ஆர்ஆர் ஸ்போர்ட் மாடலின் முன்பக்கம் மற்றும் பின்புற குளிர்ந்த இருக்கைகள் வழங்கப்படுகிறது.

    இரண்டு எஸ்யுவி மாடல்களிலும் நான்கு வித இன்ஜின்: வி6 அல்லது வி8, பெட்ரோல் அல்லது டீசல் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. இரண்டு பெட்ரோல் பவர்டிரெயின்கள் 340 ஹெச்.பி., வி6 இன்ஜின் 525 ஹெச்.பி., வி8 மோட்டார் டீசல் வேரியன்ட் 258 ஹெச்.பி, மற்றும் 340 ஹெச்.பி. திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் விலை ரூ.1.74 கோடி (எக்ஸ்-ஷோரூம், இந்தியா), ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ.99.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×