search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரெனால்ட் குவிட் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரெனால்ட் குவிட் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

    ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் 2018 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
    புதுடெல்லி:

    ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் 2018 ரெனால்ட் குவிட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.2.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்கும் புதிய 2018 குவிட் மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    ரெனால்ட் குவிட் 0.8 லிட்டர் MT, 1.0 லிட்டர் MT மற்றும் 1.0 லிட்டர் AMT மாடல்கள் முறையே ரூ.2.66 லட்சம், ரூ.3.57 லட்சம் மற்றும் ரூ.3.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் ரெனால்ட் பத்து புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் புதிய குவிட் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. 

    கட்டம்போட்ட பேட்டர்ன் மற்றும் ஸ்பீட்ஸ்டெர் கிராஃபிக்ஸ் காரின் ஹூட், ரூஃப், ஷோல்டர் லைன் மற்றும் காரின் உள்புறம் வரை செல்கிறது. இத்துடன் பிரத்யேக ஸ்டைலிங் கிடைக்க அருமையான நிறங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், புதிய குவிட் 2018 எடிஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட மீடியாநௌ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



    2018 ரெனால்ட் குவிட் மாடல் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள்: 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் ஸ்மார்ட் கண்ட்ரோல் எஃபீஷியன்சி (SCe) பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய 799சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 53 பி.எச்.பி. பவர், 71 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சக்திவாய்ந்த 1.0 லிட்டர் மாடலில் 999சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.எச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ, 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு AMT யூனிட் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    மூன்று ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 2018 ரெனால்ட் குவிட் முன்பதிவுகள் இந்தியா முழுக்க துவங்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய லிமிட்டெட் எடிஷன் குறைந்த காலகட்டத்திற்கு மட்டும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×