search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது மகன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவெடுக்கும் -  எடியூரப்பா
    X

    எடியூரப்பா

    எனது மகன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவெடுக்கும் - எடியூரப்பா

    • கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது.
    • அடுத்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது. இத்தேர்தலை சந்திக்க பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    வரும் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்மந்திரியுமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். தன்னுடைய சட்டசபைத் தொகுதியை எனது மகன் பி.ஒய்.விஜயேந்திரனுக்காக விட்டுக்கொடுக்கிறேன். ஷிகாரிபுரா வாக்காளர்கள் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், எடியூரப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனது மகன் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார். இறுதி முடிவை பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் எடுப்பார்கள் என கூறினேன். அவர்களின் முடிவே இறுதியானது. என்னால் அழுத்தம் கொடுக்க முடியாது. பரிந்துரையை மட்டுமே என்னால் கூறமுடியும். மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார்.

    Next Story
    ×