search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தோல்வி உறுதி என்பதால் துணை ஜனாதிபதி தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிட மறுப்பு
    X

    தோல்வி உறுதி என்பதால் துணை ஜனாதிபதி தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிட மறுப்பு

    • நாளுக்கு நாள் மாநில கட்சிகளின் ஆதரவு பெருகி வருவதால் திரவுபதி முர்மு வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
    • எதிர்கட்சி சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    இந்த தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இதுவரை பா.ஜனதா மற்றும் எதிர்கட்சிகள் அறிவிக்கவில்லை.பா. ஜனதா வேட்பாளர் குறித்து அக்கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    ஆனால் எதிர்கட்சியான காங்கிரஸ் இன்னும் மவுனமாக உள்ளது.

    ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்கட்சி சார்பில் போட்டியிட முதலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பரூக் அப்துல்லா மற்றும் காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

    ஆனால் அவர்கள் 3 பேருமே போட்டியிட மாட்டோம் என அறிவித்தனர். காங்கிரசும் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. இதையடுத்து முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்கா களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தவர்.

    இவருக்கு எதிராக பாரதிய ஜனதா சார்பில் பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    இவருக்கு நாளுக்கு நாள் மாநில கட்சிகளின் ஆதரவு பெருகி வருவதால் திரவுபதி முர்மு வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    துணை ஜனாதிபதி தேர்தலிலும் தோல்வி உறுதி என்பதால் இந்த தேர்தலிலும் போட்டியிட காங்கிரஸ் மறுத்து உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

    இதையடுத்து எதிர்கட்சி சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேல்-சபை காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் பல கட்சிகள் போட்டியிட தயக்கம் காட்டுகின்றன. இதனால் வேட்பாளர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் மத்தியில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டவில்லை. இதுவரை வேட்பாளர் யார்? என்பது பற்றி முடிவு செய்யவில்லை என்றும் தொடர்ந்து பல கட்டங்களாக கூட்டணி கட்சிகளுடன் பேசி வருவதாகவும் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×