ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கேரளாவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் டாடா குழுமம்!

விழிஞ்சம் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது.
ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கேரளாவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் டாடா குழுமம்!
Published on

கேரளாவில் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க டாடா குழுமம் அனுமதி கோரியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சதீசன், டாடாவின் இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிலத்தை வழங்க உள்ளதாகவும், ஒரு மாதத்திற்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டுமான திறனை மேம்படுத்தவும், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் நாட்டின் பங்கை உயர்த்தவும் இம்முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கேளர அரசுக்கு சொந்தமான விழிஞ்சம் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com