என் மலர்

  இந்தியா

  குழந்தை வெள்ளையாக பிறந்ததால் சந்தேகம்- மனைவி, குழந்தையை கொன்று வாலிபர் தற்கொலை
  X

  குழந்தை வெள்ளையாக பிறந்ததால் சந்தேகம்- மனைவி, குழந்தையை கொன்று வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுவாதி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.
  • கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுவாதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம், பொட்டி ஸ்ரீ ராமுலு மாவட்டம், பெத்தபட்ட பூ பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது 22). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  திருமணமான சில மாதங்களில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர், மாமனார் கோவிந்தைய்யா, மாமியார் பங்காரம்மா ஆகியோர் அடித்து துன்புறுத்தி வந்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மற்றும் மாமனார், மாமியார் அடித்து துன்புறுத்துவதாக சுவாதி தனது தாயாரிடம் தெரிவித்தார். குழந்தை பிறந்தால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாறு சுவாதியிடம் அவரது தாயார் தெரிவித்தார்.

  இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுவாதி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுவாதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மாமியார் வீட்டிற்கு சென்ற முரளி குழந்தையை பார்த்து குழந்தை வெள்ளையாக உள்ளதால் தனக்கு பிறக்கவில்லை என சுவாதியிடம் தகராறு செய்தார்.

  இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சுவாதி தனது பெண் குழந்தையுடன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.

  நேற்று முன்தினம் குழந்தை சம்பந்தமாக கணவர்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முரளி சுவாதியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார்.

  மேலும் ஆத்திரம் தீராத அவர் குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த கோவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜா வலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணங்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து முரளியின் தந்தை கோவிந்தைய்யா, தாய் பங்காரம்மா ஆகியோரை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவி மகளை கொலை செய்து கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×