search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த வந்தே பாரத் ரெயில் சென்னை- மைசூரு: நவம்பர் 10 முதல் இயக்க முடிவு
    X

    அடுத்த வந்தே பாரத் ரெயில் சென்னை- மைசூரு: நவம்பர் 10 முதல் இயக்க முடிவு

    • ஐ.சி.எப்-ல் இருந்து 27 ரெயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
    • தெற்கு ரெயில்வேக்கு 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே அதிக வேகமாக ஓடக்கூடிய "வந்தே பாரத்" ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    இதுவரையில் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற் சாலையில் இருந்து 4 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு புதுடெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த ஆண்டு ஐ.சி.எப்-ல் இருந்து 27 ரெயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயிலை ரெயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது.

    தெற்கு ரெயில்வேக்கு 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று இறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், இந்தியாவின் அதிவேக ரெயிலான 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வரும் நவம்பர் 10-ம் தேதி அன்று இயங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் சென்னையில் இருந்து பெங்களூரு- மைசூரு மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×