search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசாவில் ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு
    X

    ஒடிசாவில் ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு

    • ரெயிலின் 2 சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெட்டி தடம் புரண்டது.
    • இரட்டை வழித்தடமாக இருந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

    புவனேஸ்வரி:

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நோக்கி ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    ஒடிசாவின் பட்நாக் ரெயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசில் அந்த ரெயில் தடம் புரண்டது. ரெயிலின் குறுக்கே காளை மாடு வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் ரெயிலின் 2 சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெட்டி தடம் புரண்டது.

    இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் எற்படவில்லை. சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் ரெயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரட்டை வழித்தடமாக இருந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஒரு மணி நேரத்தில் மீட்பு பணிகள் முடிந்து தடம் புரண்ட ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.

    Next Story
    ×