என் மலர்

  இந்தியா

  உத்தரப் பிரதேசத்தில் ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி- 5 பேர் மாயம்
  X

  உத்தரப் பிரதேசத்தில் ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி- 5 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காணாமல் போனவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • 20 பேர் டிராக்டருடன் கர்ரா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

  உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் 20 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கர்ரா ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  விபத்து குறித்து, ஹர்டோய் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) அவினாஷ் குமார் கூறுகையில், " டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர் முகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  டிராக்டரின் சக்கரம் கழன்றியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் டிராக்டருடன் கர்ரா ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 14 பேர் உயிர் பிழைத்துள்ளனர். உயிரிழந்த முகேஷின் உடல் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஐந்து பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் மாகாண ஆயுதப்படை வெள்ளப் பிரிவு குழுக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

  காணாமல் போனவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அனைவரும் மீட்கப்படும் வரை நடவடிக்கை தொடரும்" என்று கூறினார்.

  Next Story
  ×