என் மலர்

    இந்தியா

    அமலாக்கத்துறை சம்மன் ரத்து விவகாரம்: செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல்
    X

    அமலாக்கத்துறை சம்மன் ரத்து விவகாரம்: செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    புதுடெல்லி:

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

    அப்போது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.

    இதற்கிடையே இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

    வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 1-ந்தேதி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×