search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- திருப்பதியில் தரிசனத்திற்கு 2 நாட்கள் ஆகிறது
    X

    திருப்பதியில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள் கூட்டம்.

    பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- திருப்பதியில் தரிசனத்திற்கு 2 நாட்கள் ஆகிறது

    • இலவச தரிசனத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 2 நாட்கள் வரை ஆகும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    • வருகிற 21-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தின விழா ஆகிய விடுமுறை நாட்களால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசனம், அனைத்து ஆர்ஜித சேவைகள், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களாலும், எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே காணப்படுகிறது.

    வைகுண்ட காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பி பக்தர்கள் ரிங் ரோடு வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றனர்.

    இன்று காலையிலும் ஏரானமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.

    இலவச தரிசனத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 2 நாட்கள் வரை ஆகும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வருகிற 21-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான அனுமதி கடிதமும் வழங்கப்படமாட்டது.

    திருப்பதியில் நேற்று 83,422 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 50,100 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் உள்ள கோதண்டராமர், கோவிந்தராஜர், திருச்சானூர் பத்மாவதி தாயார், கபில தீர்த்தம், ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் என அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    Next Story
    ×