search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழா- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
    X

    டெல்லியில் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழா- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

    • டெல்லி, அதன் கலாச்சாரம், உணவு மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருவார்கள்.
    • இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இதை மாற்றுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.

    டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை 'டெல்லி ஷாப்பிங் திருவிழா' நடத்தப்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இந்த விழாவில் டெல்லி, அதன் கலாச்சாரம், உணவு மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என்றும் இந்த நிகழ்வு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலக கூறியதாவது:-

    30 நாள் டெல்லி ஷாப்பிங் திருவிழா ஜனவரி 28 முதல் பிப்ரவரி 26 வரை (2023 இல்) ஏற்பாடு செய்யப்படும். இது இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும். நாங்கள் அதை இப்போது தொடங்குகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இதை மாற்றுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.

    இந்த திருவிழாவின் மூலம் டெல்லியின் பொருளாதாரம் பெரும் ஏற்றம் பெறும். டெல்லியின் தொழிலதிபர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும், அவர்கள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். டெல்லியை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

    டெல்லி மற்றும் அதன் கலாச்சாரத்தை அனுபவிக்க நாடு முழுவதும் இருந்தும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் அழைக்கப்படுவார்கள். இது ஒரு இணையற்ற ஷாப்பிங் அனுபவமாக இருக்கும். ஏராளமான தள்ளுபடிகள் வழங்கப்படும். டெல்லி முழுவதும் அலங்கரிக்கப்படும். கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×