search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுலிடம் விசாரணை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது- காங்கிரஸ் கண்டனம்
    X

    காங்கிரஸ்


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராகுலிடம் விசாரணை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது- காங்கிரஸ் கண்டனம்

    • ராகுல் காந்தியின் அரசியலை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது.
    • அரசியல் பழிவாங்கும் முயற்சியில் பிரதமர் ஈடுபடுகிறார்.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தலைமை செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜீ வாலா கூறியதாவது:-

    ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துைற விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானதாகும். தீங்கு விளைவிக்க கூடியது. அரசியல் பழிவாங்கும் முயற்சியில் பிரதமர் ஈடுபடுகிறார்.

    ராகுல் காந்தியின் அரசியலை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது. அவர் பொதுமக்களின் பிரச்சினையை எழுப்புவதால் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    சட்டத்தை அமலாக்கத்துறை பின்பற்றினால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் அதை பின்பற்றுவது இல்லை. அமலாக்கத்துறை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.

    என்ன குற்றம் நடந்தது எனக் கேட்கிறோம். பதில் இல்லை. முதல் தகவல் அறிக்கையின் நகல் கூடஇல்லை. கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பா.ஜனதா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×