என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆலப்புழாவில் படகு கவிழ்ந்து விபத்து- பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி
- ஆலப்புழா மாவட்டம் ஆரண்முலா உத்திரட்டாதியில் நேற்று படகுப் போட்டி நடைபெற்றது.
- விபத்து நடந்தபோது தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சிறிய படகுகளில் சென்று மீட்பு நடவடிக்கை எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஆரண்முலா உத்திரட்டாதியில் நேற்று படகுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஏராளமான படகுகள் கலந்து கொண்டன. இதில் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய ஒரு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சென்னிதலாவைச் சேர்ந்த சதீசனின் மகன் ஆதித்யன் (வயது 17) மற்றும் செருக்கோலைச் சேர்ந்த வினீஷ் ஆகியோர் நீரில் மூழ்கி பலியானார்கள். பலியான ஆதித்யன், பிளஸ்-2 மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது உடலை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டனர்.படகில் இருந்த மேலும் இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கோழிக்கோட்டில் பந்தயத்தின் போது 25 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது
எனினும், இந்த விபத்தால் படகுப் போட்டி பாதிக்கப்படவில்லை. அனைத்து நெறிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து நடந்தபோது தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சிறிய படகுகளில் சென்று மீட்பு நடவடிக்கை எடுத்தனர்.