search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் பிரசாரத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். படத்தை பயன்படுத்துவோம்- பா.ஜ.க. அறிவிப்பால் பரபரப்பு
    X

    தேர்தல் பிரசாரத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். படத்தை பயன்படுத்துவோம்- பா.ஜ.க. அறிவிப்பால் பரபரப்பு

    • பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை எங்கள் தேர்தல் திட்டமாக கொண்டு 2024 தேர்தலில் போட்டியிடுவோம்.
    • வரும் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு கடும் போட்டியை கொடுப்போம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர் சோமு வீரராஜு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    குடும்ப அடிப்படையிலான அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் மற்றும் தார்மீக நெறிமுறைகள் இல்லாததால் பாஜக அந்த கட்சிகளுக்கு எதிராக உள்ளது. மாநில கட்சிகளில் சாமானியர்களுக்கு உரிய மரியாதையும் உயர்வும் கிடைக்காது.

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அணுகுமுறை ஒருபோதும் மாறவில்லை. இன்னும் அவரை ஒரு வம்ச அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் நபராகவே கருதுகிறார்.

    ஜெகன்மோகன் ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை பாஜக தீவிரப்படுத்தும்.

    "பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை எங்கள் தேர்தல் திட்டமாக கொண்டு 2024 தேர்தலில் போட்டியிடுவோம். வரும் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு கடும் போட்டியை கொடுப்போம்.

    ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகள் போல போலீஸ் செயல்பட வேண்டாம் .

    ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் மீது ஜெகன்மோகன் ரெட்டி அரசு பொய் வழக்குகள் பதிவு செய்வது அநியாயம்.

    பா.ஜ.க.வை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலத்தில் 5,000 கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும் வரவேற்பு இருப்பதால், அடுத்த தேர்தலில் அவரது படத்தை பிரசாரத்தில் பயன்படுத்துவோம்.

    செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் அமித்ஷா, ஜூனியர் என்டிஆர் சந்திப்பு நடந்தது.

    இந்த நிலையில் பா.ஜ.க. பிரசாரத்தில் ஜூனியர் என்டிஆர் படத்தை பயன்படுத்துவோம் என கூறியிருப்பது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×