என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் தங்கம் கடத்தி வந்த விமான பயணி கைது
- கரிப்பூர் விமான நிலையம் வழியாக பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் தாசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
- சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் விமான நிலையம் வழியாக பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் தாசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இது குறித்த புகாரின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது ஜெட்டாவிலிருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஒருவரது நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அவர்களால் தங்கத்தை மீட்க முடிய வில்லை. இதைத் தொடர்ந்து, அந்த நபரை கொண்டோட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே சோதனை செய்தனர்.
இதில் அவரது வயிற்றில் தங்கம் அடங்கிய 4 கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் வெளியே எடுத்து பார்த்த போது 992 கிராம் தங்கம் கடத்தி கொண்டு வருவது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மலப்புரம் குழிமன்னாவைச் சேர்ந்த முஸ்தபா (வயது 41) என தெரியவந்தது.
கடந்த சில மாதங்களில் கரிப்பூர் விமான நிலையத்தில் பதிவாகும் 57-வது தங்கம் கடத்தல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.