என் மலர்

  இந்தியா

  செல்லுபடியாகும் டிக்கெட் இருந்தும் பயணிக்க மறுத்ததால் ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
  X

  செல்லுபடியாகும் டிக்கெட் இருந்தும் பயணிக்க மறுத்ததால் ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிஜிசிஏ மூலம் தொடர்ச்சியான சோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
  • ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விமானத்தில் ஏற மறுத்ததற்காகவும், அதன்பிறகு அவர்களுக்கு கட்டாய இழப்பீடு வழங்காததற்காகவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

  இதுதொடர்பாக டிஜிசிஏ மூலம் தொடர்ச்சியான சோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லியில் கண்காணிப்பின்போது, ஏர் இந்தியா விஷயத்தில் விதிமுறைகள் (பயணிகளுக்கு இழப்பீடு தொடர்பாக) பின்பற்றப்படவில்லை என்பது தெரிந்தது. இதனால் விமான நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  இந்த விஷயம் மிகவும் கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அமலாக்க நடவடிக்கையின்படி ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×