search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகத்தில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை: சித்தராமையா வேதனை
    X

    கர்நாடகத்தில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை: சித்தராமையா வேதனை

    • தினமும் ஊடகங்களை பார்த்தால் ஏதாவது ஒரு முறைகேடு குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது.
    • அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    பாகல்கோட்டை:

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன், சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு உள்பட 100-க்கும் மேற்பட்ட முறைகேடுகள் பகிரங்கமாகியுள்ளன. தினமும் ஊடகங்களை பார்த்தால் ஏதாவது ஒரு முறைகேடு குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பயன்படுத்த கூடாத வார்த்தைகளை பட்டியலிட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ளன.

    அதில் ஊழல், வெட்கக்கேடு, நாடகம், திறனற்றவர் போன்ற பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளின் இந்த நடவடிக்கை தங்களின் தவறுகளை மூடிமறைக்கும் கோழைத்தனமான செயல் ஆகும்.

    அதே போல் அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. தவறான நோக்கத்தில் படம் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. அதனால் அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு அரசு ஊழியர்களை காக்கும் நோக்கம் கொண்டது அல்ல. அது தனது ஊழல்களை மூடிமறைக்கும் நோக்கத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும். அரசின் இந்த உத்தரவால் ஊழல் செய்யும் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். போலீசார் மாமுல் வசூலிப்பதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

    ஊழல் தடுப்பு படை பணம் வசூலிக்கும் படையாக உள்ளதாக ஐகோர்ட்டு கடும் அதிருப்தியை தெரிவித்தது. கர்நாடகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை. அரசு அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    Next Story
    ×