search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உண்மையான சிவசேனா யார்? - ஷிண்டே அணியின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
    X

    சுப்ரீம் கோர்ட்

    உண்மையான சிவசேனா யார்? - ஷிண்டே அணியின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

    • மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நெருக்கடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டன.
    • உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் குழப்பத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க முடிவு விவகாரம், சபாநாயகர், கவர்னரின் அதிகாரங்கள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மேலும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், இதனால் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஷிண்டே அணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷிண்டே தரப்பில் ஆஜரான வக்கீல், மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது விரைந்து முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை கோர்ட்டு கட்டுப்படுத்தாது என்றார்.

    இதையடுத்து கட்சி சின்ன பிரச்சினையில் உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு மீது வரும் 27-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உண்மையான சிவசேனா மற்றும் கட்சியின் வில், அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற ஷிண்டே அணியின் முறையீட்டை ஏற்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்தது.

    மேலும், ஷிண்டே அணி தேர்தல் கமிஷனில் முறையிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Next Story
    ×