என் மலர்tooltip icon

    இந்தியா

    சிந்து நதி நீர் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது, அதை விட்டுத்தர முடியாது- பிரதமர் மோடி
    X

    சிந்து நதி நீர் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது, அதை விட்டுத்தர முடியாது- பிரதமர் மோடி

    • 70 ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தரப்படும்.

    இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

    செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.

    செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நமது விவசாயிகள் நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.

    * சிந்து நதி நீரில் இந்திய விவசாயிகளுக்கு உரிமை உள்ளது.

    * 70 ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * சுதந்திரத்திற்கு பின்னர் வறுமை என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    * தற்போது அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்.

    * சிந்து நதிநீர் ஒப்பந்தம் நியாயமற்றது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    * சிந்து நதிநீர் ஒப்பந்தம் இந்தியா ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

    * ஆத்மநிர்பார் என்பது இந்தியா தனது சொந்த சக்தியையும், வளத்தையும் நம்பி இருப்பது.

    * ஆத்மநிர்பார் என்பது டாலரையும், பவுண்டையும் நம்பி இருப்பதல்ல.

    * ரத்தமும் தண்ணீரும் ஒருசேர பாய முடியாது என சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    * சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு அநியாயமான ஒப்பந்தம் அதனால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    * சிந்து நதி நீர் ஒப்பந்தமானது ஒருதலைபட்சமானது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    * சிந்து நதி நீர் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது. அதை விட்டுத்தர முடியாது.

    * எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×