பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராடியபோது, மோடி வெளியிட்ட வீடியோவை 5 மணி நேரம் நீக்கியிருந்தது பேஸ்புக்.
மெட்டா
மெட்டா
Published on

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்தின் மூத்த அதிகாரியா உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் ஜோயல் கப்லான் இந்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் காணொளிச் செய்தி ஒன்று ஃபேஸ்புக்கிலிருந்து ஐந்து மணி நேரம் நீக்கப்பட்டிருந்ததற்காக அவர் மன்னிப்பு கோரினார்.

மெட்டாவின் உயர் அதிகாரி ஜோயல் கப்லான்

​​மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மெட்டா நிறுவனத்தின் தலைமை உலகளாவிய அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan) இந்த மன்னிப்பைத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பதிவைக் கட்டுப்படுத்திய தவறுக்காக மெட்டா நிறுவனம் சார்பில் நான் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினேன் என்று கபிலன் கூறியதாக மெட்டா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடியின் காணொளி நீக்கப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோர மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்து, அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்பூர்வமான பாதுகாப்பு (statutory immunity) ரத்து செய்யப்படும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பும் மன்னிப்பு கோரும் நிகழ்வும் நடைபெற்றுள்ளன.

பிரதமர் மோடி வீடியோ 5 மணி நேரம் நீக்கம்

ஜூலை 28 அன்று இந்திய இளைஞர்களை உரையாற்றி, வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து மோடி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு, அந்தத் தளத்தில் சிறிது நேரம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு மெட்டாவின் உயர்மட்ட உலகளாவிய நிர்வாகிகளை வரவழைத்திருந்தது. அந்தப் பதிவு நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை கிடைக்கவில்லை என்று துபே கூறியிருந்தார்.

தொழில் நுட்பக்கோளாறு எனக் கூறியது பேஸ்புக்

பரவலான மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சர்ச்சை எழுந்தது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த சமூக ஊடக நிறுவனம், இந்தச் சம்பவத்திற்குக் காரணம் ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி மன்னிப்புக் கோரிய நிலையில், அந்த விளக்கம் "போதுமானதாக இல்லை" என்று மெய்ட்டி (MeitY) கூறியது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான அந்த நிறுவனம், அந்த உள்ளடக்கம் "தவறுதலாக" அகற்றப்பட்டு, பின்னர் தளத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாகக் கூறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com