search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்கி லாக்கரை ஆய்வுசெய்ய வரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் - மணீஷ் சிசோடியா
    X

    மணீஷ் சிசோடியா

    வங்கி லாக்கரை ஆய்வுசெய்ய வரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் - மணீஷ் சிசோடியா

    • மணீஷ் சிசோடியா வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
    • விசாரணைக்கு நானும் எனது குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுப்போம் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா டெல்லி துணை முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தியது.

    இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சி.பி.ஐ. எங்கள் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய வருகிறது. ஆகஸ்ட் 19-ம் தேதி எனது வீட்டில் 14 மணி நேரம் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதுபோல் லாக்கரிலும் எதுவும் கிடைக்காது. சி.பி.ஐ.யை வரவேற்கிறோம். விசாரணைக்கு நானும் எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×