என் மலர்tooltip icon

    இந்தியா

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல- திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
    X

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல- திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

    • முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஹூமாயூன் கபீரரை ‘சஸ்பெண்டு’ செய்தது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது எதுவும் இல்லை. வழிபாட்டு தலத்தை கட்டுவது அரசியலமைப்பு உரிமை. பாபர் மசூதி கட்டப்படும்.

    33 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் இதயங்களில் ஒரு ஆழமான காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயத்துக்கு ஒரு சிறிய தைலம் பூசுகிறோம்.

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்போவதாக அறிவித்த போது எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. இந்த நாட்டில் 40 கோடி முஸ்லிம்களும், மேற்கு வங்காளத்தில் 4 கோடி முஸ்லிம்களும் உள்ளனர். இங்கே ஒரு மசூதியை கட்ட முடியாதா? பாபர் மசூதி எனது திட்டம் மட்டுமல்ல. மாநில நிர்வாகமும், திரிணாமுல் காங்கிரசும் இதில் ஈடுபட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×